சுரைக்காய் உருண்டை – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
சுரைக்காய் துருவியது 200 கிராம்
வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
பச்சமிளகாய் 3
சோம்பு 1 தேக
கறிவேப்பிலை சிறிதளவு
இஞ்சி பூண்டு துருவியது 1 மேக
உப்பு தேவையான அளவு
தக்காளி 2
எலுமிச்சை சாறு 1 மேக
கொத்தமல்லி புதினா சிறிதளவு
காஷ்மீர் மிளகாய் தூள் 1 மேக
மஞ்சள் தூள் 1 தேக
தனியா தூள் 1 மேக
கறிமசாலா 1 தேக
ஆளி விதை(flaxseed)2 மேக
தாளிக்க கடுகு,வெண்ணெய் 50 கிராம்
செய் முறை#
1 .உருண்டைக்கு :
ஆளி விதையை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் சுரைக்காய்,வெங்காயம்1/2 , பச்சமிளகாய் 2,சோம்பு,கொத்தமல்லி,கறிவேப்பிலை (அனைத்தும் பொடியாக அரிந்தது). பொடித்த ஆளி விதை தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.கலவையை உருண்டையாக உருட்டி பணியாரக்கல்லில் வெண்ணெய் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2 .கிரேவி#
வடச்சட்டியில் வெண்ணெய் போட்டு உருகியதும் கடுகு போடவும் , கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை,வெங்காயம் , போடவும்,வெங்காயம் நன்றாக வதக்கியதும் அரிந்த தக்காளி போடவும்.மேலே கொடுத்துள்ள தூள்களை,இஞ்சி பூண்டு சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.கிரேவிக்கு தேவையான உப்பு சேர்த்து கொள்ளலாம்.எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.உருண்டையை போட்டு உடையாமல் கண் கரண்டியில் மெதுவாக திரும்பவும்.கொத்தமல்லி புதினா தூவி பரிமாரவும்.
குறிப்பு#
ஆளி விதை வேண்டாம் என்பவர்கள் பாதாம் அல்லது முட்டை பயன்படுத்தலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media