சுரைக்காய் சௌசௌ பட்டர் மசாலா – ராதிகா ஆனந்தன்

இரண்டு காய்கறிகளையும் பெரியதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.. கலவையாக 250 கி – 300 கி எடுத்துக்கோங்க..

ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய், அரை ஸ்பூன் சீரகம், தக்காளி நறுக்கியது 2, ஒரு பெரிய வெங்காயம் நறுக்கியது, 2 பூண்டு, 3 மிளகாய் வற்றல் போட்டு வறுத்து நன்கு மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் கடுகு தாளித்து நறுக்கிய காய்கறிகளை போட்டு மஞ்சள் தூள் தூவி வதக்கி அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் வேகவிடவும். வெந்ததும் உப்பு போட்டு கலந்து , குடைமிளகாய் 4 துண்டு இருந்தால் அதனையும் வெட்டிப் போட்டு வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்து இரக்கவும். காய்கறி அரையிலிருந்து முக்கால் பதம் வெந்திருந்தால் போதும்.. ரொம்ப வெந்தால் கூட்டு சுவை வந்துவிடும்.

கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி இலை,
20கிராம் வெண்ணெய்யை போட்டு கலந்து பரிமாறவும்..

சமையல் குறிப்பு:

Follow us on Social Media