சுறா புட்டு – சாந்தி வெங்கடேஸ்வரன்

1கிலோ சுறா நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு
சேர்த்து ஐந்து நிமிடம் வேக விட்டு தோலை உரித்து நன்கு
உதிர்த்து வைக்கவும் .
1/2கிலோவெங்காயம்,பொடியாக நறுக்கவும் .
2விரலளவு இஞ்சி,1கைப்பிடி உரித்த பூண்டு இரண்டையும்
மிகப்பொடியாக நறுக்கவும் .10 ப.மிளகாய் நறுக்கவும்.
1கொத்து கறிவேப்பிலை ,1கட்டு கொத்தமல்லி அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும் .
வாணலியில் சற்று தாராளமானதாக எண்ணை ஊற்றி காய்ந்ததும் ப.மி,இஞ்சி,பூண்டு,கறிவேப்பிலை ,கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கி பிறகு வெங்காயம் உப்பு ம.தூள் சேர்த்து வதக்கவும்.
இப்போது உதிர்த்து வைத்துள்ள சுறாவையும் போட்டு நன்கு வதக்கி இறக்கவும் .

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100006417000154

Follow us on Social Media