சுவையான முட்டை காளான் சூப் – கோக்கி மகேஷ்

#தேவையான பொருட்கள்:
1. முட்டை – 2 to 4
2. காளான் – 100 to 200 கி
3. வெங்காய தாள் அல்லது கொத்தமல்லி இலை – தே . அளவு
4. உப்பு – தே . அளவு
5. ப.மிளகாய் – தே . அளவு
6. வெண்ணெய் – தே. அளவு

செய்முறை:
முட்டையை உடைத்து தே . அளவு உப்பு சேர்த்து நன்றா க அடித்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் வெண்ணெய் , ப. ப.மிளகாய் , காளான் மற்று ம் சிறி தளவு உப்பு போட்டு நன்கு வணக்கவும்.

அதன்பிறகு சூப்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். (1/2 to 1 லிட்டர் தண்ணீர்).

அடித்து வைத்துள்ள முட்டையை சிறி து சிறி தாக கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து கலக்கியவாரே ஊற்ற வேண்டும்.

வெங்காய தாள் அல்லது கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

பின் குறிப்பு:
ஷிடாகே காளான் (Shitake Mushroom) பயன்படுத்தினால் சுவை மிகுதியாக இருக்கும்.

தண்ணீருக்கு பதிலாக கோழி (அ) மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்க்கலாம்.

சமையல் குறிப்பு:

Follow us on Social Media