சூப்பி முட்டை – ஸ்ரீராம் சுப்பிரமணியன்

சூப்பி முட்டை

(Tangy Soupy egg)

4 – முட்டை
3 – தக்காளி(ப்யூரியாக, வேகவைத்து அரைத்தது)
2 – வெங்காயம் (பொடிப்பொடியாக நறுக்கியது)
1 – சின்ன குடை மிளகாய் (பொடிப்பொடியாக நறுக்கியது)
6 – பூண்டு பல் (பொடிப்பொடியாக நறுக்கியது)
1 – பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் – மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் – காஷ்மீரி மிளகாய் தூள்
1 டீஸ்பூன் – கரம் மசாலா
1 டீஸ்பூன் – ஆப்பிள் சிடார் வினிகர்/ வினிகர்
கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)
3 ஸ்பூன் – ஆலிவ் ஆயில்
உப்பு (தேவைக்கு)

செய்முறை:

ஆலிவ் ஆயிலில் வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய்,குடை மிளகாய் ஆகியவற்றை மிக நன்றாக வதக்கவும். அதில் மஞ்சள் தூள்,காஷ்மீரி மிளகாய் தூள்,கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

அதில் தக்காளி ப்யூரியை சேர்த்து மிதமான சூட்டில்(lowflame) தேவையான அளவு தண்ணீர் அல்லது வெஜிடபுள் ஸ்டாக்(veg stock) சேர்த்து கொதிக்க விடவும். இரண்டு நிமிடம் கொதித்த பிறகு தேவையான உப்பு , வினிகர் சேர்க்கவும்.

இப்போது இது சூப் பதத்திற்க்கு வந்து இருக்கும், அதில் முட்டைகளை உடைத்து மெதுவாக ஊற்றி, மிதமான சூட்டில்(lowflame) மூடி வைக்கவும்.

முட்டைகள் நன்றாக வெந்தவுடன் , கொத்தமல்லியை தூவி இறக்கவும்.

உங்களது அருமையான டாங்கி சூப்பி முட்டை தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media