சூரை மீன் முட்டை கொத்து – முருகானந்தன்

தேவையான பொருட்கள் – சூரை மீன் 1/4 கிலோ (Tuna)
முட்டை – 3
மிளகாய்ப்பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சப்பொடி – 1/2 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
வெட்டிய வெங்காயம் – 2
வகுந்த ப.மிளகாய் – 2
கருவேப்பிலை – கொஞ்சம்
செய்முறை –  அடுப்பில் சட்டி ஏற்றி, காய்ந்தவுடன் எண்ணெய் விட்டு, ப.மிளகாய் உள்ளே போட்டு, பட படன்னு பொரிந்தவுடன், வெங்காயம், உப்பு போட்டு, நன்றாக வதக்கி, பொடி இரண்டும் போட்டு, மேலும் கொஞ்சம் வதக்கி, பொடி வாசம் போனவுடன், அடிச்ச முட்டை நடுவில் ஊற்றி, நன்றாகக் கொத்தி, கருவேப்பிலை வறுத்துப் போட்டு…..
அப்புறமென்ன, இறக்கி, பரிமாறி, இருவர் நல்லா சாப்பிடலாம்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media