சூறை மீன் குழம்பு(டுனா மீன்) – ராணி விஜயன்

நேரம் : பதினைந்து  நிமிடங்கள் (சுமாராக)

தேவையான பொருள்கள் :

 1. சூறை மீன் 1 கிலோ

(மஞ்சள் தூள், தயிர் , உப்பு பூட்டு 5 நிமிடம்

ஊற வைத்து விட்டு பின்னர் நன்கு மீண்டும்

கழுவ வேண்டும்)

 1. பெரிய வெங்காயம் – 1
 2. தக்காளி – 3
 3. புளி – கொஞ்சம் (தேவைப்பட்டால்)
 4. தேங்காய் – அரை மூடி.
 5. பாதாம் – 1 5
 6. கசகசா – 1 ஸ்பூன்
 7. உப்பு – தேவைக்கு
 8. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

மசாலாவுக்கு

 1. மீன் குழம்பு பொடி – ¾ ஸ்பூன்
 2. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
 3. சீராக தூள் – ½ ஸ்பூன்
 4. மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
 5. மல்லி தூள் – 1 ½ ஸ்பூன்

தாளிப்புக்கு

 1. கடுகு – ¼ ஸ்பூன்
 2. காய்ந்த மிளகாய் – 2
 3. வடகம் – கொஞ்சம்
 4. கறிவேப்பிலை – கொஞ்சம்

செய்முறை:

 1. அடுப்பில் மண் / இரும்பு பாத்திரம் வைத்து தேங்காய் எண்ணெய் விடவும்.
 2. தக்காளி வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
 3. வதங்கியவுடன் இத்துடன் தேங்காய், பாதம், கசகசா ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 4. மறுபடியும் மண் பாத்திரம் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
 5. தாளிப்புக்கு கொடுத்த கடுகு, காய்த்த மிளகாய், வடகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போடவும்.
 6. அரைத்த விழுதையும் போட்டு வதக்கவும்.
 7. மசாலா பொடிகளை போடவும். உப்பு பாரத்து போடவும்.
 8. நன்கு வதக்கவும்.
 9. சிறிது தண்ணீர் மற்றும் புளி கரைசல் ஊற்றவும். (தேவையான அளவு நீர் சேர்த்துக் கொள்ளவும்)
 10. இப்போது உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
 11. கொதி வந்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும்.
 12. பிறகு கழுவி வைத்த டுனா மீனை அதில் போடவும். குழம்புக்குள் முழுகுமாறு மீனை போட வேண்டும்.
 13. ஆறு அல்லது ஏழு நிமிடம் வேக வைக்கவும்.
 14. பிறகு இறக்கி சூடாக பரிமாறவும்.

 

இணைப்புக்கு : https://www.youtube.com/watch?v=6hWf_icdu4w

 

சூறை மீன் குழம்பு தயார்.

சூறை மீனின் பேலியோ பலன்களை இணையத்தில் பார்க்கவும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100000349157027

Follow us on Social Media