செட்டிநாட்டு மிளகு சீரக கோழி வறுவல் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

கோழி -1/2கி
வெங்காயம் -2
தக்காளி – 2
இஞ்சிபூண்டு
விழுது – 2ஸ்பூன்
நல்லெண்ணெய் – தே. அளவு
பட்டை – 3
ஏலக்காய் – 2
கிராம்பு – 4
சோம்பு பொடி -1ஸ்பூன்
சீரகம் பொடி – 2ஸ்பூன்
மிளகு பொடி -3ஸ்பூன்
மிளகாய் தூள் -1ஸ்பூன்
மல்லி தூள் -2ஸ்பூன்
மஞ்சள் தூள் -1ஸ்பூன்
கறிவேப்பிலை -1கைபிடி அளவு

#செய்முறை::

*நல்லெண்ணெயில் பட்டை ,கிராம்பு, சோம்பு, ஏலக்காய் தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
*வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்டு சேர்த்து வதக்கி,மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்,சோம்புத்தூள் சேர்த்து வதக்கி கோழியை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலக்கும்படி வதக்கவும்.
*கோழி வேகும் அளவு நீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும்.
*நீர் நன்றாக சுண்டியவுடன் அரைத்து வைத்துள்ள மிளகு சீரக பொடி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இதன்மேல் மறுபடி கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வறுத்தால்,
*சுவையான செட்டிநாட்டு மிளகு சீரக கோழி வறுவல் தயார்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100006513832331

Follow us on Social Media