சேலத்து தலைக்கறி பிரட்டல் & மூளை ஃபிரை – திருப்பூர் கணேஷ்

பேலியோ – அசைவம்

தேவையான பொருட்கள்:

1. ஆட்டுத்தலை – 1/2 கிலோ + 100 கிராம் கொழுப்பு
2. நெய் – 3 மேசைக்கரண்டி
3. சீரகம் – 1 ஸ்பூன்
4. சின்ன வெங்காயம் – 100 கிராம்
5. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 மேசைக்கரண்டி ( https://www.facebook.com/…/tam…/permalink/1850598078560462/… )
6. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
7. மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
8. கரம்மசாலா – 1 தேக்கரண்டி ( https://www.facebook.com/photo.php?fbid=10207460467372266&set=gm.1846051562348447&type=3 )
9. மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டி
10. மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
11. கறிவேப்பிலை – 3 கொத்து
12. மல்லித்தழை – 10 தண்டு
13. இந்து உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரில் தலைக்கறியை போட்டு உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் 1தேக்கரண்டி, கறிவேப்பிலை 1 கொத்து, மல்லித்தழை 3 தண்டு கிள்ளி போட்டு, 1 டம்ளர் தண்ணி ஊற்றி கலக்கிவிட்டு 6 to 7 விசில் விட்டு இறக்கிவைக்கவும்.

வாணலியில் நெய்விட்டு சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை 1 கொத்து, மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித்தழை 3 தண்டு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள் இவை அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கி பின் குக்கரில் உள்ள தலைக்கறியை நீருடன் கொட்டி ஓட்டிவிட்டு தே.அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். கறி வெந்தபின் மிளகுத்தூள் தூவி 2நிமிடம் பிரட்டி விட்டு ட்ரை ஆனபின் கறிவேப்பிலை 1கொத்தையும் மல்லித்தழை 4தண்டையும் சிறிதாக கிள்ளி போட்டு இறக்கிவைக்கவும்.

இப்போது அட்டகாசமான சேலத்து தலைக்கறி பிரட்டல் தளதளன்னு சாப்பிட தயார் 🙂
……………………………………………………………………..

மூளை ஃபிரை

தேவையான பொருட்கள்:

1. ஆட்டுமூளை – 1
2. தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
3. கடுகு – 5
4. சின்ன வெங்காயம் – 4 அ 5 பொடியாக
5. பச்சைமிளகாய் – 2 பொடியாக
6. கறிவேப்பிலை – 1 கொத்து பொடியாக
7. மல்லித்தழை – 2 தண்டு பொடியாக
8. இந்து உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாக்கனக்கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி பின் ஆட்டுமூளையை போட்டு உப்பு போட்டு 5 நிமிடம் ஓட்டிவிட்டு கலக்கி பதம் (கொலகொல) வந்ததும் இறக்கிவைக்கவும்.

இப்போது அட்டகாசமான மூளை ஃபிரை கொலகொலான்னு தலைக்கறி பிரட்டலோட முழுங்கத் தயார் 🙂
……………………………………………………………………

சமையல் குறிப்பு :

Follow us on Social Media