சோம பான சுறா பான போன் பிராத் – செந்தழல் ரவி

எங்க பாட்டிக்கு கூன். எங்க பாட்டியோட அம்மாவுக்கும். எங்கள் குடும்பத்தில் பலருக்கும் எலும்பு சம்பந்தமான நோய்கள். தப்பிக்க வழி சொல் ரவி என்றார் ஒரு நண்பர்.

பதில் ஒன்றுதான் : போன் பிராத்

மனிதர் சைவம்.

நான் எப்படி இதை சாப்பிடுவது ரவி வேறு வழி சொல்.

கையை பிடித்துக்கொண்டேன்.

ஒமேகா 3 மீன் மாத்திரை தானே ?

ஆமாம்..

அதை மருந்து என சாப்பிடுகிறீர்கள் அல்லவா ?

இதுவும் மருந்துதான் வெறும் சூப். குடிச்சுட்டு போங்க பாஸு !!

ஒத்துக்கொண்டார்..

கொள்ளை கொள்ளையாக மினரல்கள் நிரம்பிய இந்த போன் பிராத்தில் Collagen, Glutamine, Glycine, Proline எல்லாம் இருக்கு. எல்லா வகையான உள்காயங்களையும் ஆற்றும் அருமருந்து. இளமை திரும்பும். நன்றாக உறக்கம் வரும். எலும்புகள் வலுவாகும். உற்சாகம் பிறக்கும். Leaky Gut போன்ற பிரச்சனைகளும் சரியாகுதாம்.

ஸ்லோ குக்கரில் 24 மணி நேரம் வைத்திருந்த பிறகு அதில் இருந்து எலும்புகளை எடுத்து போட்டுவிட்டு அப்படியே பாட்டிலில் ஊற்றி மூன்று நாட்கள் சாப்பிடலாம். அதிக நாட்கள் ஸ்டோர் செய்ய வேண்டும் என்றால் டீப் ப்ரீஸரில் வைத்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ஸ்லோ குக்கர்
ஆட்டு எலும்புகள்
ஏலக்காய், ஜாதிக்காய், பட்டை, லவங்கம், 2 கேரட், வெங்காயத்தாள், புதினா இலை, ஒரு வெங்காயம், உப்பு தேவையான அளவு.

செய்முறை:

ஸ்லோ குக்கரில் ஆட்டு எலும்புகளை போட்டு அது முழுகும் வரை தண்ணீர் ஊற்றவும். பின் கேரட், வெங்காயம் வெட்டி போட்டு, வாசனை பொருட்கள் எல்லாம் போட்டு, அப்படியே மூடி Low மோடில் 24 மணி நேரம் விட்டுவிடவும்.

பிறகு அந்த சூப்பை மட்டும் கண்ணாடி பாட்டிலில் மாற்றிக்கொண்டு மற்ற விஷயங்களை போட்டுவிடவும். (சில கொழுப்பு கரையாமல் இருந்தால் அதை சாப்பிட்டுவிடலாம் – அசைவத்தினர்).

ஒரு தினமும் 300 எம்.எல் அளவுக்கு குடித்து 3 நாளில் முடிக்கலாம். (அதற்கும் மேல் மீதம் இருந்தால் டீப் பிரீஸரில் வைத்துக்கொள்ளவும், எடுத்து சூடு செய்து குடிக்கும் பதத்தில் குடிக்கலாம்).

Bone broth health benefits என கூகிள் செய்து தேடி இந்த சத்துக்கள் செறிந்த உணவை மிஸ் பண்ணாமல் உண்பீர்கள் என்ற நம்பிக்கையோடு !!

சமையல் குறிப்பு:

Follow us on Social Media