டபுள் டக்கர் ஆம்லெட் – யசோ குணா

முட்டைகள் 5

துருவிய பசு மஞ்சள் , கேரட் , பச்சை மிளகாய் விதைகள் நீக்கி , மா இஞ்சி , பன்னீர் தேவைக்கு

பொடியாக நறுக்கிய கீரை உங்கள் (விருப்பத்திற்கேற்ப ) கொத்தமல்லி இழைகள் , சிறிய தக்காளி விதைகள் நீக்கி

14064235_858354867633197_857775788136806786_n

ஒரு பெரிய ஸ்பூன் யோகர்ட் & வெண்ணெய் & ஆளி விதை பொடி , பெருங்காயம் , உப்பு சேர்த்து மிக்சியில் அடித்து தோசை மாவு பதத்தில் வந்ததும் பாத்திரத்தில் மாற்றி முட்டையோடு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும் ..

தோசைகல்லில் இந்த கலவையை கொஞ்சமாக ஊற்றி மேலே துருவிய காய்கறிகள் கீரைகளை தூவவும் , மீண்டும் கொஞ்சம் கலவையை மேலே ஊற்றி பன்னீர் மற்றும் சிறிது மா இஞ்சி , கேரட் துருவலை தூவி விடவும் ..

மீதியுள்ள கலவையையும் மேலே ஊற்றி மூடி வைக்கவும் ..

14051596_858354914299859_7505479963210825068_n

முக்கியமான ஒன்று அடுப்பு சிம்மில் தான் இருக்கனும் வேக கால் மணி நேரம் எடுக்கனும் ..

பின்னர் மெதுவாக திருப்பி போட்டு பத்து நிமிடங்கள் விட்டால் போதும் ..

திருப்பி போட்டால் பிய்ந்து போய்விடும் என்ற எண்ணம் தோன்றினால் கல்லிலேயே நாஙு துண்டங்களாக்கி பின்னர் ஒவ்வொன்றாக திருப்பி போடுங்கள்..

இருநபர்களுக்கு ஒரு வேளை உணவு தயார்..

நம் குழுவின் அனைத்து குடும்பத்திலும் இதை ருசித்து பார்க்க வேண்டும் என அன்பு கட்டளை இடுகிறேன் ..

இந்த சுவையை படத்தில் காட்டி விவரிக்க முடியாது.. வார்த்தையாலும் சொல்ல முடியாது .. அவ்வளவு மிருதுவாக முட்டையின் வாடை துளியும் அறியமுடியாத சுவை ..

எனக்கும் சமையல் கை பக்குவம் வந்து கொண்டிருக்கிறது என நினைக்கையில் ..

நம் குழுவிற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்..

வாழ்க கொழுப்புடன் !!

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media