டிராகன் சிக்கன்- பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

சிக்கன் – 1/2 கி
காய்ந்த மிளகாய்
விழுது – 2 ஸ்பூன்
மிளகு தூள் – 1 ஸ்பூன்
முட்டை
வெள்ளை பகுதி – 2
சில்லி பிளேக்ஸ் – 1 ஸ்பூன்
குடைமிளகாய் – 1
தக்காளி – 1
ஸ்பிரிங் ஆனியன் – தே. அளவு
தக்காளி சாஸ் – 4 ஸ்பூன்
இஞ்சி பூண்டு
பொடியாக நறுகியது – 3 ஸ்பூன்
பாதாம் பொடி – 1 ஸ்பூன்
வெண்ணெய் – தே. அ
முந்திரி – 6
காய்ந்த மிளகாய் – 1
இந்துப்பு – தே. அ

#செய்முறை ::

* சிக்கன், இந்துப்பு, சில்லி பேஸ்ட், மிளகு தூள், முட்டை, பாதாம் பொடி சேர்த்து ஒன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற விடவும்.
*வெண்ணெயில் ஊறிய சிக்கனை வறுத்து
எடுத்துக் கொள்ளவும்.
*வெண்ணெயில் சில்லி பிளேக்ஸ், இஞ்சி, பூண்டு, ஸ்பிரிங் ஆனியனின் 4 ஆனியன்
நறுக்கியது, நீளமாக வெட்டிய குடைமிளகாய் மற்றும் தக்காளி, சில்லி பேஸ்ட், கா. மிளகாய், பேலியோ தக்காளி சாஸ், இந்துப்பு ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
*பிறகு வறுத்த சிக்கனை சேர்த்து ஸ்பிரிங்
ஆனியன் இலையை சிறிதாக நறுக்கி சேர்க்கவும், வெண்ணெயில் வறுத்த முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும்
*5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்தால்
சுவையான டிராகன் சிக்கன் தயார்.
{குறிப்பு : காய்ந்த மிளகாயை மிக்சியில் 1/2 நிமிடம் அடித்தால் சில்லி ப்ளேக்ஸ் தயார்,
காய்ந்த மிளகாயை சுடு நீரில் ஊற வைத்து மிளகாயை அரைத்தால் சில்லி பேஸ்ட் தயார், ஸ்பிரிங் ஆனியன் இல்லாத நேரத்தில் பெரிய வெங்காயம் 1 சேர்த்துக் கொள்ளலாம்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media