டொமெட்டோ ஸ்பைசி பன்னீர் – யசோ குணா

தேவையான பொருட்கள் :

பன்னீர் – 300 கிராம்

பால். – 40 மில்லி

பேலியோ காய் – 1 கப் (100 கிராம்)
( நான் உபயோகித்தது முட்டைகோஸ் )

காஸ்மீர் மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி

வேதாஸ் மசாலா – 1 தேக்கரண்டி

இஞ்சி & பூண்டு & பச்சை மிளகாய் – &

வெங்காயம் தேவைக்கு

தக்காளி. – 2

யோகர்ட் அ தயிர். – 2 தேக்கரண்டி

காய்ந்த கறிவேப்பிலை – 1 பிடி

பிரிஞ்சி இழை & பட்டை தேவைக்கு

மிளகு தூள் ஒரு பின்ச் மட்டும்

உப்பு தேவைக்கு

தேங்காய் அ வெண்ணெய்

செய்முறை :

சமைக்க துவங்கும் முன் பன்னீரை பால் மற்றும் மிளகுதூள் & இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து ஊற வைக்கவும் .

தக்காளியை அரைத்து எடுக்கவும்.

தோசைக்கல்லில் பன்னீரை வெண்ணை சேர்த்து பிரட்டி நிறம் மாறியவுடன் எடுக்கனும்..

வாணலியில் பிரிஞ்சி இலை & பட்டை மற்றும் கறிவேப்பிலை ( உள்ளங்கையில் வைத்து பொடித்து ) இட்டு தாளிக்கவும்..

பின்னர் காய் சேர்த்து வதக்கவும் , தக்காளி பேஸ்ட் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி பொடிகளை சேர்த்து பன்னீர் ஊறிய பால் சேர்த்து கொதிக்க விடவும் பாதி தண்ணீர் வற்றிய உடன் , பன்னீரை கொட்டி யோகர்ட் மற்றும் உப்பு சேர்த்து மூடிவிடவும் ..இறக்கும் போது தண்ணீர் முழுவதும் வற்றியிருக்க வேண்டும் ..

பறிமாற வழக்கம் போல வெங்காயம் மற்றும் கொத்துமல்லி இழைகள்..

நேற்று செய்தேன் , இன்று பிறந்த நாளுக்கு ஏதாவது ஸ்பெசலா வேணுமானு கேட்டா இதையே திரும்பவும் கேட்கிறார்..

மகிழ்ச்ச்ச்சி..

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100003760758227

Follow us on Social Media