தக்காளி ரசம்/சூப் – பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள் ::

தக்காளி – 4
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
பூண்டு ( இடித்தது) – 6 பல்
மிளகு, சீரகம்
(பொடியாக ) – 2 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – தே. அளவு
கொத்த மல்லி இலை – தே. அளவு
மஞ்சள் – 1 ஸ்பூன்
உப்பு – தே. அளவு
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்
/நல்லெண்ணெய் – தே. அளவு
தண்ணீர் – தே. அளவு

#செய்முறை :::

* தக்காளியை நன்றாக கரைத்துக் கொண்டு மஞ்சள், மிளகு சீரகப் பொடி, உப்பு, பெருங்காயத்தூள், இடித்த பூண்டு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.
*எண்ணெய்யுடன் கடுகு சேர்த்துத் தாளித்து, கறி. வே, வெங்காயம், ப. மிளகாய் சேர்த்து வதக்கி கரைத்த தக்காளிக் கலவையை சேர்க்க வேண்டும்.
*5 நிமிடம் கொதித்தவுடன் கொத்த மல்லி இலை தூவினால் தக்காளி சூப் தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media