தந்தூரி சிக்கன் (பேலியோ ஸ்டைல்) – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

சிக்கன் தொடை பகுதி : ஒரு கிலோ ( நன்றாக கீறிவிடவும்)
எலுமிச்சை சாறு : இரண்டு தேக்கரண்டி
தந்தூரி சிக்கன் மசாலா : நாலு தேக்கரண்டி (தந்தூரி சிக்கன்மசாலா வீட்டில் செய்தது)
மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
தயிர் : ஆறு தேக்கரண்டி.
இஞ்சி பூண்டு விழுது : இரண்டு தேக்கரண்டி.
உப்பு : தேவையான அளவு.
நெய் : வறுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்றாக கழுவி, எழுமிச்சை சாறையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம்ஊ றவைக்கவும்.

பிறகு தந்தூரி சிக்கன் மசாலா, மிளகாய் தூள், தயிர், இஞ்சி பூண்டு விழுது , தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியவுடன் ஒரு தவாவில் நெய் ஊற்றி, மிதமான தீயில் , சிக்கனை இரு புறமும் பொன்னிறமாக (Shallow Fry) ( மூடி போட்டு வேகும் வரை ) வறுத்து எடுக்கவும் .

தந்தூரி சிக்கன் (பேலியோ ஸ்டைல்) தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media