தலைகறி வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
ஆட்டுத் தலை1
( கடையிலே சிறிதாக வெட்டி வாங்கிக்கொள்ளவும்,அதை நன்றாக கழுவி விடவும்)
சின்ன வெங்காயம் 15
இஞ்சி 3 இஞ்ச் துண்டு
பூண்டு 10 பல்
மஞ்சள் தூள் 1 டீக
மிளகாய்தூள் 1 டீக
மிளகு 1டேக
சீரகம் 1 டேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை சுத்து கொழுப்பு எண்ணெய்,2 வர மிளகாய்
செய் முறை#
முதலில் குக்கரில் கறியை போட்டு தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள, வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது(5 சின்ன வெங்காயம் , இஞ்சி பூண்டு மூன்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்) போட்டு குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும்.
ஒரு வடச்சட்டியில் சுத்து கொழுப்பு அல்லது சுத்து கொழுப்பு எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை வர மிளகாய் , சின்ன வெங்காயம் (நீள வாக்கில் அரிந்து கொள்ளவும் )போட்டு தாளித்து விடவும்.அடுத்து வெந்த கறி,மிளகாய் தூள் போட்டு நீர் வற்றும் வரை சுருள வதக்கினால் சுவையான தலைக்கறி வறுவல் ரெடி.
செய்ய தேவையான நேரம் _45 நிமிடம்
4 பேருக்கு பரிமாரலாம்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media