தேங்காய்பால் முருங்கைக்காய் மசாலா – சுஜாதா வெங்கடேசன் சேலம்

தேவையான பொருட்கள்

முருங்கைக்காய் – 5
தேங்காய்பால் – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 8
தேங்காய் எண்ணெய் – 1 மே.க.
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு
மிளகாய்தூள் – 1 தே.க.
மஞ்சள்தூள் – 1/2 தே.க.

செய்முறை
1. முருங்கைக்காயை 1 இஞ்ச் துண்டுகளாக நறுக்கவும்.
2. தேங்காய் எண்ணெயில் வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள், முருங்கைக்காய் போட்டு வதக்கி, தேங்காய்பால் ஊற்றவும்.
3. காய் வெந்து, கெட்டியானதும் இறக்கவும்.

 சமையல் குறிப்பு: 

Follow us on Social Media