தேங்காய்ப்பால் மீன் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள்:

பாறை மீன் (தோல் உரித்தது) : 4 துண்டு (அரை கிலோ)
வெங்காயம் : 1
பச்சை மிளகாய : 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 தேக்கரண்டி
மிளகு தூள் : 1 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
தேங்காய் பால் : 2 கப்
கறிவேப்பிலை : சிறிது
கடுகு : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு : 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் : 3 தேக்கரண்டி
கொத்தமல்லி : சிறிதளவு

செய்முறை:

மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும்..

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது.

திக்கான பதம் வந்தவுடன் மூடியை திறந்து, அதில் மிளகு தூளை தூவி கிளறி, பின் கொத்தமல்லியை தூவி இறக்க வேண்டும்.

சுவையான தேங்காய்ப்பால் மீன் தொக்கு தயார் !

சமையல் குறிப்பு :

Follow us on Social Media