தேங்காய் சாக்கோ லட்டு – கதிரவன்

தேவையானவை

1. 3 கப் தேங்காய் பவுடர். (என்ன இது என குழம்ப வேண்டாம். கடைகளில் தேங்காய் பொடித்து விற்கிறார்கள். இல்லை என்றால் தேங்காயை துருவி வறுத்து வைத்துக் கொள்ளுங்கள்.)

2. அரை கப் பாதாம் பருப்பு பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

3. 1 tsp Unsweetened Cocoa Powder

4. 80ml அமுல் மில்க் கிரீம்.

5. 1 ஏலக்காய்

6. 1 Tbsp நெய்

செய்முறை : ஏலக்காய் , பாதாம் பருப்பு பொடியாக்கியதை ஒரு நிமிடம் வறுக்கவும். அதனுடன் தேங்காய் துருவியதை சேர்த்து இரண்டு நிமிடம் வறுக்கவும்.

அடுப்பில் இருந்து இறக்கி விட்டு 1tsp கோகோ பவுடர்,சேர்த்து கலக்கவும்

பின்பு 80ml மில்க் கிரீம் சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும் . லட்டு பிடிக்கும் பதம் வரும். அடுத்து நெய் சேர்த்து பிசைந்து லட்டு பிடிக்கவும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100008099283409

Follow us on Social Media