தேங்காய் பால் பசு மஞ்சள் – ஆனந்துராஜ் ரிச்செர்டு

மதிய வேளையில் சாப்பிடும் அளவுக்கு அதிகமான உணவு மற்றும் மோசமான செரிமானம் போன்றவை தான் மாலை வேளையில் வயிற்று பிரச்சனையால் அவஸ்தைப்படச் செய்யும். அதுமட்டுமின்றி, இவை இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும்
இப்படி தூக்கத்தைத் தொலைப்பதில் இருந்து விடுபட, இரவில் படுக்கும் முன் தேங்காய் பாலில் மஞ்சள், இஞ்சி கலந்து குடித்து வாருங்கள். இதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். சரி, இப்போது அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம்.

தேவையான பொருட்கள்:

இஞ்சி பவுடர் – 1 டீஸ்பூன்

தேங்காய் பால் – 2 கப்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

இஞ்சி:

நிறைய ஆய்வுகளில் இஞ்சியில் உள்ள ஏராளமான மருத்துவ குணங்கள், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யும் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக மாதவிடாய் கால வலிகள், குடலியக்க பிரச்சனைகள், ஒற்றைத் தலைவலி, ஆஸ்டியோபோரோசிஸ், சர்க்கரை நோய், குமட்டல் மற்றும் வாந்தி, புற்றுநோய், எடை குறைவு போன்றவற்றை இஞ்சி குணப்படுத்தும்

தேங்காய் பால்:

தேங்காய் பாலில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை உள்ளது. இதனால் இது புரோட்டீன் இழப்பைக் குறைக்கும், செரிமான பிரச்சனைகளைத் தடுக்கும், திசுக்களின் பாதிப்பை குணப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

மஞ்சளில்:

ஆன்டி-செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளதால், பழங்காலமாக இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மூட்டு வலிகள், உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுவது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது, அல்சரைக் குணப்படுத்துவது, செரிமான பாதையில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மிளகு:

மஞ்சளுடன் மிளகை சேர்க்கும் போது, மஞ்சளில் உள்ள முக்கிப் பொருளான குர்குமினை உறிஞ்சும் செயல் துண்டப்படும்.
தயாரிக்கும் முறை:

ஒரு பெரிய பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் போட்டு, குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் கிளறி இறக்க.

உட்கொள்ளும் முறை: இந்த கலவையை தினமும் இரவில் படுக்கும் முன் 1 மணிநேரத்திற்கு முன் குடித்து வந்தால், மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர்வீர்கள் மற்றும் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/100001890803417

Follow us on Social Media