தேங்காய் பால் மட்டன் குழம்பு – பார்த்தி பாஸ்கர்

தேவையான பொருட்கள் ::

மட்டன் – 1/2 கி
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு அரைத்த விழுது – 3 ஸ்பூன்
பட்டை – 4
கிராம்பு – 6
சோம்பு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தேங்காய் பால் – 1/2 கப்
மிளகாய் தூள் – தே. அளவு
மல்லி தூள் – தே. அளவு
மஞ்சள் தூள் – தே. அளவு
தேங்காய் எண்ணெய் – தே. அளவு
கறிவேப்பிலை – தே. அளவு
கொ. மல்லி இலை – தே. அளவு
உப்பு – தே. அளவு

செய்முறை:

*குக்கரில் மட்டன், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, இ. பூ விழுது,வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை,பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து 6 விசில் விடவும்.
* தேங்காய் எண்ணெய் + பட்டை+ சோம்பு + கிரம்பு வதக்கி குக்கரில் வேகவைத்த மட்டனை சேர்த்து கொதிக்க விடவும்.
* அரை கொதியில் தேங்காய் பாலை சேர்த்து பதத்திற்கு வந்தவுடன் கொத்த மல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான தேங்காய் பால் மட்டன் குழம்பு தயார்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100005811731329

Follow us on Social Media