தேங்காய் பொடி – பிருந்தா ஆனந்த்

#செய்முறை : 1

*தேங்காயை துருவி சிறிது நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அடி வரை
துருவாமல் வெள்ளை பகுதியை மட்டும் துருவவும்.
*பிறகு தேங்காய் பாலை வடிகட்டியில் வடித்து விட்டு அந்த பாலை குடித்துவிடலாம் மீதி இருக்கும் சக்கையை ஒரு துணியில் நிழலில் காய விடவும்.
*நன்றாக காய்ந்தவுடன் வாணலியில் சேர்த்து மிதமான சூட்டில் நிறம் மாறாமல் வறுத்து,சூடு ஆரியவுடன் மிக்சியில் ஒரு சுத்து விட்டு அரைத்து காற்று புகாத டப்பாவில் ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

#செய்முறை : 2

*தேங்காயை உடைத்து தேங்காய் பத்தைகளின் வெள்ளை பகுதியை மட்டும்
நீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
*மிதமான சூட்டில் நிறம் மாறாமல் வருத்து அரைத்துக் கொள்ளவும்.
*ஃபிரிட்ஜில் காற்று புகாத டப்பாவில் வைத்து உபயோகிக்கலாம்.
*தேங்காய் பொடியை நீரில் ஊற வைத்து மிக்சியில் அரைத்து குழம்பில் சேர்க்கலாம்.
*பொரியலில் கடைசியாக சேர்த்தால்
சுவையாக இருக்கும்.

#செய்முறை : 3

(நன்றி.ராதிகா ஆனந்தன்.
தேங்காய்களை உடைத்து ஃபிரிஜில் 4 நாட்கள் மூடாமல் வைத்திருந்தால் பத்தைகளாக நறுக்கி அரைக்கும் போது நீர் விடாமல் இருக்கும்.. இப்போ இதை சுத்தமான ஈரம் இல்லாத வாணலி அல்லது கல்லை காய்ந்ததும் போட்டு நிறம் மாறாமல் சுலபத்துல வறுத்திடலாம்.. ஆறியதும் அரைத்து டப்பாக்களில் போட்டுக் கொள்ளலாம்)

{குறிப்பு: கட்லட், கோலா உருண்டை,பிங்கர் பிஷ் ,etc…. போன்றவற்றுக்கு பைண்டிங்காக பயன்படுத்தலாம் .
*தேங்காய் வாசனையுடன் உணவு வேண்டும் என்றால் செய்முறை 2 ல்
உள்ள தேங்காய் பொடி உபயோகிக்கலாம்.
*தேங்காய் வாசனை வேண்டாம் என்றால்
செய்முறை 1 ல் உள்ள பொடியை உபயோகிக்கவும்}

சமையல் குறிப்பு :

Follow us on Social Media