தேங்காய் மசாலா பனீர் – ஸ்ரீதரன் கோபால்

தேவையான பொருட்கள் :
——————————–

வெண்ணெய்/நெய் தாளிக்க
கடுகு
சீரகம்
மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
வெங்காயம் சிறிது
கறிவேப்பிலை
தக்காளி – 1 அல்லது வீட்டில் செய்த சாஸ்/கெட்ச்சப்
இந்துப்பு
பூண்டு – 10 பற்கள்
குறுமிளகு – 15-20 (தேவையான காரம்)
பனீர் – 100கி(சிறி சிறு துண்டுகளாக வெட்டியது)
தேங்காய் – 1 மூடி(பாதி தேங்காய்)

செய்முறை :
————–

*தேங்காயை தோன்டி எடுத்து சிறிதாக வெட்டி, குறுமிளகு, பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் ஆம் “தண்ணீர் சேர்க்காமல்” அரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்

*பொடியாக நறுக்கிய தக்காளி/ சாஸ்/கெட்ச்சப் இட்டு தேவையான அளவு இந்துப்பை சேர்த்து வனக்கவும்.

*நன்கு கிரேவியானவுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். (குறுமிளகு நிறைய சேர்ப்பதால் குறைவாக மிளகாய் தூள் போதும்)

*சிறிய துண்டுகளாக வெட்டிய பனீரை சேர்க்கவும், தண்ணீர் சிறிது ஊற்றி மூடி வைத்து கொஞ்சம் குறைந்த வெப்பத்தில் வேகவிடவும். இதனால் தக்காளி, மஞ்சள் உப்பு எல்லாம் பனீரில் இறங்கி சூவையை கூட்டும்.

* இப்போது பூண்டு, குறுமிளகு சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையைச் சேர்க்கவும். சிறிது மீண்டும் தண்ணீர் சேர்த்து தேவையான பதம்(செமி கிரேவி அல்லது ட்ரையாக) வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.

பூண்டு மிளகு மணத்துடன் தேங்காய்ப் பனீர் தாயார். 🙂

இதில் காலிபிளவர் சாதம் மற்றும் அரிசி சாதம் சாப்பிட்ட உணர்வு கிடைக்கும்.

Follow us on Social Media