நண்டு சூப், பசுமஞ்சள் வறுவல், மிளகு வறுவல் – தேன்மொழி அழகேசன்

அசைவம்# நண்டு
1. நண்டு சூப்#
நண்டு+ மஞ்சள் தூள்+ இஞ்சி பூண்டு விழுது+ சீரகம் மிளகு தூள்+ உப்பு.. குக்கரில் 2 விசில் விட்டு எடுத்தால் எளிதான நண்டு சூப் தயார்
பருகும் போது சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொள்ளவும்.

2 .பசுமஞ்சள் வறுவல்#
தேவையான பொருட்கள்
நண்டு (கடல் நண்டு)
இஞ்சி பூண்டு விழுது
மிளகாய்தூள்
மஞ்சள் தூள் அல்லது பசுமஞ்சள்
பேலியோ மசாலா
தக்காளி 1
வெங்காயம் 2
தாளிக்க சோம்பு கடுகு கறிவேப்பிலை நெய்
செய் முறை#
இரும்பு வடச்சட்டியில் வெண்ணெய் அல்லது நெய் அல்லது சுத்து கொழுப்பு எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை அரிந்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் பேலியோ மசாலா உப்பு சேர்த்து நன்றாக வதக்கியதும் நண்டை போட்டு நண்டுக்கு தேவையான அளவு உப்பு சிறிது நீர் சேர்த்து வேக வைக்கவும்.நண்டு வேக அதிக நேரம் எடுக்காது.நண்டு கலர் மாறினாலே போதும்

3. நண்டு மிளகு வறுவல்#
மேலே உள்ளவற்றோடு சிறிது நெய் சீரகம் மிளகு தூள் சேர்த்து சுருள வதக்கினால் சுவையான மிளகு வறுவல் ரெடி
செய்ய தேவையான நேரம் 40 நிமிடம்
குளிர் காலத்தில் சளி இருமலுக்கு உகந்தது

சமையல் குறிப்பு :

Follow us on Social Media