நண்டு ரசம் – Rtn கண்ணன் அழகிரிசாமி

நண்டு : 3
தக்காளி : 3
பூண்டு : 15 பல்
மிளகுப்பொடி : 1/2 தே‌க்கர‌ண்டி
சீரகப்பொடி : 1 தே‌‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி : 1/2 தே‌க்கர‌ண்டி
காய்ந்த மிளகாய் : 4
கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, தேங்காய் எண்ணெய் – தா‌ளி‌க்க

செய்முறை :

நண்டினை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து அ‌ம்‌மி‌க் குழ‌வி அ‌ல்லது ம‌த்து வை‌த்து அத‌ன் ஓடுக‌ள் உடைபடு‌ம் அள‌வி‌ற்கு தட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பூ‌ண்டையு‌ம் நசு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

தக்காளியை நன்றாக பிசைந்து ரச‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றவாறு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கரை‌த்து வை‌த்து‌க் கொ‌‌ள்ளு‌ங்க‌ள்.

அந்த கரைச‌லி‌ல், மிளகுப்பொடி , சீரகப்பொடி, உ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் பொடி, த‌ட்டி வை‌த்‌தி‌ரு‌க்கு‌ம் ந‌ண்டு , பூ‌ண்டு ‌விழுது ஆ‌கியவ‌ற்றை‌ப் போடவு‌ம்.

அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌‌த்து அ‌தி‌ல் எண்ணெய் ‌வி‌ட்டு நன்றாகக் காய்ந்தவுடன் கடுகை‌ப் போடவு‌ம். கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய்களை ‌கி‌ள்‌ளி‌ப் போடவு‌ம். தா‌ளி‌த்ததை தயார் செய்த கரைச‌லி‌ல் கொ‌ட்டி கரைசலை அடு‌ப்‌பி‌ல் வை‌க்கவு‌ம்.

ந‌ண்டு வெ‌ந்து, ரச‌ம் கொ‌தி‌த்தது‌ம் கொ‌த்தும‌ல்‌லி, ‌க‌றிவே‌ப்‌பிலை போ‌ட்டு இற‌க்கவு‌ம்.

சுவையான நண்டு ரசம்‌ தயா‌ர் …

சமையல் குறிப்பு :

Follow us on Social Media