நாட்டுக்கோழி காட்டு வறுவல் – திருப்பூர் கணேஷ்

தேவையான பொருட்கள்:

1. நா.கோழி – 1 கிலோ
2. வரமிளகாய் – 15 அ 20 (வேண்டிய காரத்தை பொருத்து)
3. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 மேசைகரண்டி ( http://tamilpaleorecipes.com/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D…/ )
4. நல்லெண்ணை – 2 கரண்டி
5. மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
6. உப்பு – தே.அளவு, கொஞ்சம் தூக்கலா

செய்முறை:

கோழிக்கறியை மஞ்சள் தூள் உப்பு போட்டு கலுவி தண்ணி இல்லாமல் வடித்து கொல்லவும்.

மண்சட்டியில் ந.எண்ணெய் 1கரண்டி ஊற்றி மிதமான அடுப்பில் வரமிலகாயை கிள்ளிப்போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்ந்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பின் கோழிக்கறியை சேர்த்து கிளறி உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் இப்போது சேர்க்க வேண்டாம் கோழிக்கறிலயே தண்ணீர் விடும்.

கறி தண்ணீர் விட்டு கொதிக்கும் போது உப்பு காரம் பார்கவும் (இரண்டுமே கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும்). அப்புறம் 1-1/2 டம்லர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். கறி நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் மீதி நல்லெண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.

இப்ப சுவையான, காரமான, ஒரப்பான நாட்டுக்கோழி காட்டு வறுவல் தயார்?. இந்த வறுவல் ஈரோடு, பவானி, பெருந்துறை ரெஷ்டாரண்ட்டுகளில் செம ஃபேமஸ்?. இப்போ திருப்பூர்ல எங்க வீட்லயும் செம ஃபேமஸ் ஆய்டுச்சுங்கோ??.

மறக்காம கொய்யாகாயோ தேங்காயோ பக்கத்துல வச்சு காரமா இருந்தா ஒரு கடி கடுச்சுக்கோங்க சொல்லிப்புட்டேன்….. இல்லனா ரவி அண்ணா சொன்னமாரி உஷ் உஷ்ன்னு வீட்ட 10 ரவுண்ட் அடிக்கணும் 🙂

வாழ்க கொழுப்புடன்! வாழ்க வளமுடன்!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media