நாட்டுக்கோழி குழம்பு – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி 1 கிலோ
சின்ன வெங்காயம் 15
தக்காளி 2
சீரகம் 1 டீக
மிளகு 1 டீக
இஞ்சி பூண்டு விழுது 1 டேக
தேங்காய் பால் 1 டம்ளர்
பேலியோ மசாலா 4 டேக
உப்பு தேவையான அளவு
தாளிக்க சோம்பு கருவேப்பிலை கடுகு வெண்ணெய்,சின்ன வெங்காயம் 5 நீள வாக்கில் அரிந்தது
செய் முறை#
1. சீரகம் மிளகு எண்ணெய் இல்லாமல் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம் தக்காளி சிறிதளவு வெண்ணெயில் வதக்கி வைத்துக்கொள்ளவும்
3. 1/2 மூடி தேங்காய் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்
4 வறுத்த சீரகம் மிளகு ,வதக்கிய சின்ன வெங்காயம் தக்காளி ஆற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
5.குக்கரில் வெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை,அரிந்த சின்ன வெங்காயம் போடவும்,வெங்காயம் நன்றாக வதக்கியதும் கோழிக்கறி , தேவையான உப்பு போட்டு வதக்கவும்
6. அரைத்த கலவை , இஞ்சி பூண்டு விழுது,பேலியோ மசாலா போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
7.குக்கரை மூடி 4 விசில் வைத்து இறக்கும்
8 கடைசியாக தேங்காய் பால் ஊற்றவும்.
செய்ய தேவையான நேரம் 45 நிமிடம்
நான்கு பேர் சாப்பிடலாம்
பி.கு 1
கிரேவி பதத்தில் வேண்டும் என்றால் தண்ணீர் 1/2 டம்ளர் சேர்த்து குக்கரில் 4 விசில் வைத்து சுருள வதக்கினால் சுவையான நாட்டுக்கோழி கிரேவி ரெடி.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media