நீர் பூசணிக்காய் தயிர்சாதம் – யசோ குணா

பூசணிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி அகண்ட பாத்திரத்தில் கொட்டி வைக்கவும் ,

ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம் & சோம்பு & 2 பச்சைமிளகாய் & கறிவேப்பிலை சேர்த்து பொடித்துக்கொள்ளவும் ,

அதை காயோடு சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும் , உப்பு தேவைக்கு.

வெந்த காயை நன்றாக மசித்து ஆறவிடவும் , இப்போது ஒரு கப் தயிரை நன்றாக கடைந்து எடுத்து வைக்கவும்.

தாளிக்கும் பொருட்கள் :

தேங்காய் எண்ணெயில் காய்ந்த மிளகாய் கடுகு & கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் சேர்த்து அடுப்பை நிறுத்தவும் ..

இப்போது ஆறிய காயுடன் தயிர்கலவையை கொட்டி சிறிது கொத்துமல்லி இழை சேர்த்து அதன் மேல் தாளித எண்ணெயை கொட்டி மூடிவைக்கவும்.

இதே நீர் பூசணிக்காய் சாதம் தயிருக்குபதிலாக தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம் ,

தேங்காய் பால் சேர்த்து செய்யும்போது ஒரு பட்டையை பொடித்து தாளிக்கும் பொருட்களோடு சேர்த்துக்கொண்டால் சுவை அள்ளும்.

மேரேக்காய் ( சௌ சௌ ) பொரியல் :

வாணலியில் கடுகு கறிவேப்பிலை தாளித்து , பொடியாக அறிந்த காயை கொட்டி கிளரி , காய் சுண்டியதும் அரை ஸ்பூன் பேலியோ மசாலா & உப்பு சேர்த்து மூடிவைக்கவும் , வெந்தபின் அடுப்பை நிறுத்தி தேங்காய் பூ சேர்த்தால் பொரியல் ரெடி ..

கேரட் & வெள்ளரி சாலட் :

வெள்ளரியை சன்னமாக வட்ட வடிவில் துண்டுகள் போட்டு ஒரு காரட்டை அதன் மேல் துருவிடவும் , சிறிது பச்சைக்கொத்தமல்லி & உப்பு & மிளகுதூள் தேவைக்கு சேர்த்து கலக்கி வைத்தால் அருமையான சுவையுடன் சாலட் தயார்..

வயிறு நிரம்ப காய்கறிகள் அற்புதமான மதிய உணவு .

சமையல் குறிப்பு:

Follow us on Social Media