நீர் பூசணி மோர்குழம்பு – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
நீர் பூசணி 200 கிராம்
சின்ன வெங்காயம் 6(நீள வாக்கில் அரிந்தது)
பச்சமிளகாய் 4(4ஆக அரிந்து கொள்ளவும்)
கருவேப்பிலை சிறிதளவு
சீரகம் 1 தேக
தேங்காய் 2 சில்
தாளிக்க கடுகு சோம்பு தேங்காய் எண்ணெய்
கொத்தமல்லி சிறிதளவு
தயிர் 1டம்ளர் (சிறியது)
உப்பு தேவையான அளவு
செய்முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு , சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை,வெங்காயம்,பச்சமிளகாய்போட்டு நன்றாக வதக்கியதும் அரிந்த நீர் பூசணி( பெரிய சைஸ்), தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
காய் நன்றாக வெந்ததும் அரைத்த தேங்காய் சீரகம் கலவையை வடச்சட்டியில் ஊற்றவும்.5 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.ரெடியாக உள்ள தயிரை ஊற்றவும்.(மோர்,மிக்ஸியில் அடித்த தயிர் .. உங்கள் விருப்பம்). கொத்தமல்லி தூவி பரிமாரவும்.மிகவும் எளிதானது.
2.முருங்கைக்காய் நீர் பூசணி பொரியல்#
தேவையான பொருட்கள்#
முருங்கைக்காய் 2
நீர் பூசணி 200 கிராம்
வெங்காயம் 1
தக்காளி 2
இஞ்சி பூண்டு விழுது 1 மேக
பேலியோ மசாலா 2 தேக(மசாலாக்கு pinned post பாருங்க)
தேங்காய் துருவல் 1 கப்
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை தேங்காய் எண்ணெய்
செய்முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெடித்ததும் கறிவேப்பிலை,வெங்காயம்,தக்காளி(அரிந்தது), நன்றாக வதக்கியதும் அரிந்த முருங்கைக்காய் நீர் பூசணி , இஞ்சி பூண்டு விழுது,தேவையான அளவு உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.காய் நன்றாக வெந்ததும் மசாலா போடவும்.நீர் வற்றும் வரை சுருள வதக்கி தேங்காய் துறுவலை போடவும்.சுவையான பொரியல் ரெடி.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media