நெத்திலி மீன் தொக்கு – சவடன் பாலசுந்தரம்

தேவையான பொருட்கள்
—————————————–
நெத்திலி மீன் – 250 கி
தக்காளி – 1
பெரிய வெங்காயம் – 1
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
கரைத்த புளி – 100 மில்லி(பேலியோ வில் புளி இல்லை. சிறிதளவே சேர்க்கவும்)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/4 தேக்கரண்டி
சாம்பார் போடி – 1/2 தேக்கரண்டி
தனியா பொடி -1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1/4 தேக்கரண்டி
பட்டை, பிரிஞ்சி இலை, கருவேப்பிலை, உப்பு – தேவையான அளவு.

14708301_10211242169752039_4880987206356483544_n

செய்முறை
——————
நெத்திலி மீனை தலை, வாலை வெட்டி சுத்தம் செய்யவும்

வாணலியில் செக்கில் ஆட்டிய தேங்காய் அல்லது நல்லெண்ணெய் விட்டு , காய்ந்த பின், வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். மேலே கூறப்பட்டுள்ள எல்லா மசாலா பொடிகளையும், இதர வஸ்துக்களையும் இட்டு மேலும் வதக்கவும்.

பிறகு கரைத்த புளி நீரை விட்டு நன்கு 10நிமிடம் கொதிக்க விடவும்.

கொதி அடங்கியவுடன் நெத்திலி மீன்களை இட்டு 4 நிமிடங்களுக்குப் பின் கறுவேப்பிலை் அடுப்பை அணைத்து விடவும்.

சுவையான நெத்திலி மீன் தொக்கு தயார்…..

முதல் முறை செய்து பார்த்தேன்…..நன்றாகவே இருந்தது…

சமையல் குறிப்பு:

https://www.facebook.com/1292875225

Follow us on Social Media