நெல்லிக்காய் பானம் (ஜுஸ்) – திருப்பூர் கணேஷ்

பேலியோ – எல்லோருக்கும் உகந்தது

நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடுச்சுடுச்சு, ஒரு நாளைக்கு 4 நெல்லிக்காய் சாப்பிடனம்னு டயட்ல சொல்லிட்டாங்க. சரி என்ன பண்ணலாம்னு யோசிச்சு சில பல ஆராய்ச்சி செய்து 🙂 இந்த ஆரோக்கியமான பானத்தை செய்து பார்த்து கீழே உங்களுக்கும் கொடுத்துள்ளேன், மகிழ்ச்சியா செய்து குடிங்க.

தேவையான பொருட்கள்

1. நெல்லிக்காய் – 3 (கொட்டை எடுத்து சிறிதாக வெட்டிவைக்கவும்)
2. கொழுந்து கறிவேப்பிலை – 2 கொத்து
3. இந்துப்பு – தே.அளவு

செய்முறை

ஒரு மிக்சி ஜாரில் நெல்லிக்காய், கறிவேப்பிலை, உப்பு போட்டு 4-5 சுத்து விட்டு அதன்பின் கொஞ்சம் தண்ணி சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த பின் அதனுடன் தேவையான அளவு தண்ணி (240ml மொத்தம்) சேர்த்து கலக்கிவிட்டு பின் ஒரு வடிகட்டியில் ஊற்றி நல்லா கையில் பிழிந்து வடித்துக்கொள்ளவும்.
கொஞ்சம் குடித்து பார்த்து உப்பு வேணும்ணா மறுபடியும் சேர்க்கவும். அதை எடுத்து பிரெஸ் ஆக குடிச்சா கசப்பு இல்லாம டேஸ்ட் நல்லா இருக்கும்.

பி.குறிப்பு-
1. கறிவேப்பிலை கொழுந்தா மட்டும் சேர்த்துங்க அப்பதான் டேஸ்ட் நல்லா இருக்கும்
2. கறிவேப்பிலை ஒரு நாள், கொத்தமல்லி இலை ஒரு நாள், புதினா இலை ஒரு நாள்ன்னு மாத்தி மாத்தி போட்டு பருகவும்.

இது போக நீங்க எதாவது எக்ஸ்ட்ரா டிப்ஸ் வச்சு இருந்தாலும் எனக்கு சொல்லுங்க.

வாழ்க கொழுப்புடன்! வாழ்க வளமுடன்!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media