நோன்பு கஞ்சி (பேலியோ கஞ்சி) – நசிமா இக்பால்

சைவம் + அசைவம்
================

1..காலிஃபிளவர் 500 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிது
சின்ன வெங்காயம் 6
தக்காளி 1\2
வெந்தயம் 1\2டீஸ்பூன்
பூண்டு. 4பல்
பச்சை மிளகாய் 2 முதல் 3
மல்லி,புதினா
பட்டை. 2
பிரிஞ்சி இலை 1
தேங்காய் விழுது. 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் குவியலாக
தேங்காய் துருவல்1டேபிள்ஸ்பூன்
உப்பு
நெய்
(பூண்டு ,வெங்காயம், மிளகாய் நறுக்க வேண்டாம்.முழுதாக போடவும்)

2 ..கீமா 100
உப்பு
இஞ்சி பூண்டு பேஸ்ட். சிறிது

கீமாவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

காளிஃபிளவரை சுடு தண்ணீரில் நல்லா கழுவி கேரட் துறுவியில் துறுவி கொள்ளவும்.தண்டை சிறியதாக நறுக்கவும்ி,கடாயில் நெய் ஊற்றி காயை பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

கடாயில் நெய் ஊற்றி பட்டை,பிரிஞ்சி இலை,வெந்தயம் தாளித்து வெங்காயம், பூண்டு,தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகாய் வதக்கி காளிஃபிளவர் சேர்த்து வதக்கி மல்லி,புதினா, உப்பு ,அரைத்த தேங்காய், தேங்காய் துருவல் மற்றும் ,கீமாவுடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் 1விசில் விடவும்.விசில் அடங்கியதும் நன்றாக மிக்ஸ் செய்யவும். நோன்பு கஞ்சி ரெடி.

கீமா இல்லாமல் செய்தால் வெஜ் கஞ்சி

இது அனைவருக்கும் ஏற்றது.நோன்பு கஞ்சிக்கு பதில் யோசித்ததில் கிடைத்தது இந்த பேலியோ கஞ்சி.

Follow us on Social Media