பசுமஞ்சள் ஊறுகாய் – மகேஷ் நாகராஜன்

தேவையான பொருட்கள்:

1. பசு மஞ்சள் – 250 கிராம்
2. இஞ்சி – 50 கிராம்
3. மிளகு – 25 கிராம்
4. எலுமிச்சை சாறு – 150 மில்லி
5. மிளகாய் தூள் – 1 1/2 தே கரண்டி
6. வெந்தயம் – 1 தே கரண்டி
7. பெருங்காயப் பொடி – 1/2 தே கரண்டி
8. நல்லெண்ணெய் – 25 மில்லி
9. கடுகு – 1 தே கரண்டி
10. உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. பசு மஞ்சள் மற்றும் இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
2. வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பெருங்காயப் பொடி மற்றும் உப்பு சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
3. மிளகை சற்று கொரகொரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
4. நல்லெண்ணயில் கடுகு தாளித்து அடுப்பை அணைத்துவிட்டு மிளகாய் தூள் சேர்த்து ஆறவைக்கவும்.
5. ஒரு கண்ணாடி குடுவையில் துருவிய மஞ்சள் மற்றும் இஞ்சி சேர்க்கவும், அதில் பொடித்த மிளகு, வெந்தய காயப்பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதில் எலுமிச்சை சாறு மற்றும் தாளித்து வைத்துள்ள நல்லெண்ணெய் கலந்து இரண்டு நாட்கள் ஊறவைத்து ஊறுகாயை உபயோகிக்கலாம்.
6. தினமும் 2 கரண்டி சேர்த்துக் கொள்ள சுவையான பசு மஞ்சள் மருத்துவம் நிறைவுறும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media