பசுமஞ்சள் சிக்கன் செமி கிரேவி – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
சிக்கன் 1/2 கிலோ
(பெரிய அளவாக அரிந்தது)
பசுமஞ்சள் அல்லது மஞ்சள் தூள்(தேவையான அளவு)
பேலியோ மசாலா 2மேக
இஞ்சி 2 அங்குலம் அளவு
பூண்டு 15 பல்
சின்ன வெங்காயம் 15
தக்காளி 1
எலுமிச்சை பழம் 1 சிறியது
உப்பு தேவையான அளவு
தேங்காய் பால் 1 டம்ளர்
தாளிக்க சோம்பு கறிவேப்பிலை நெய்
செய்முறை#
சிக்கனை எலுமிச்சை சாறு அல்லது ஆப்பிள்சிட்டர் வினிகர் உப்பு சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.
வெங்காயம் இஞ்சி பூண்டு மூன்றையும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய் ஊற்றி சோம்ப கறிவேப்பிலை ஊற வைத்த சிக்கனை போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.அரைத்த விழுது தக்காளி மஞ்சள் , மசாலா,தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.தேங்காய் பால் ஊற்றி குக்கரில் 2 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.தண்ணீர் தேவையில்லை.
செய்ய தேவையான நேரம் 30 நிமிடம்.

2.பசுமஞ்சள் சிக்கன் ப்ரை#
தேவையான பொருட்கள்
சிக்கன் 1/2 கிலோ
பசுமஞ்சள் அல்லது மஞ்சள் தூள்
மிளகாய்தூள் 1 மேக
இஞ்சி 2இன்ச்
பூண்டு 10 பல்
எலுமிச்சை பழம் 1 அல்லது ஆப்பிள்சிட்டர் வினிகர்(ACV)
உப்பு தேவையான அளவு
செய் முறை#
சிக்கனை நன்றாக கழுவிய பின் தேவையான அளவு மஞ்சள் , மிளகாய்தூள் எலுமிச்சை சாறு அல்லது ஆப்பிள்சிட்டர் வினிகர் ACV உப்பு சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.தோசைக்கல்லில் நெய் தடவி சிக்கனை வைத்து மிதமான சூட்டில் மூடி போட்டு வறுக்கவும்.5 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி போட்டு நெய் தடவவும்.ப்ராய்லர் சீக்கிரமாக வெந்து விடும்.நாட்டுக்கோழியை 1/2 வேக்காடு குக்கரில் வைத்து எடுத்து பின் மசாலா தடவி ஊற வைத்து செய்யவும்.வேக வைத்த நீரை சூப்பாக குடித்து கொள்ளலாம்.
மைக்ரோவேவ் அவனில் மைக்ரோவேவ் 5 நிமிடம்+ கிரில் மைக்ரோவேவ்யில்10நிமிடம் வைத்து கொள்ளவும்.இடையிடையே எடுத்து நெய் அல்லது வெண்ணெய் தடவி கொள்ளவும்.

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media