பசுமஞ்சள் மீன் வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
சங்கரா மீன் 10(1.5கிலோ)
பசுமஞ்சள் அல்லதுமஞ்சள் தூள் தேவையான அளவு
மிளகாய்தூள் 1 மேக
இஞ்சி 2 இஞ்ச்
பூண்டு 10 பல்
உப்பு தேவையான அளவு
சீரகம் மிளகு 1 தேக
எலுமிச்சை சாறு 1 மேக
செய் முறை#
மேலே உள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு நன்றாக கெட்டியா அரைத்து கொள்ளவும்.அரைத்த விழுதை மீனில் தடவி ஊற வைக்கவும்.மீன் மசாலாவில் ஊற ஊற சுவை அதிகம்.தோசைக்கல்லில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி மிதமான சூட்டில் மீனை வேக வைக்கவும்.மீனை திருப்பி போட்டு நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி வேக வைத்தால் சுவையான மஞ்சள் மீன் வறுவல் ரெடி.
நான் காலையில் மசாலா தடவி பிரிட்ஞ்ல வைத்து விட்டேன்.சுவை சூப்பர்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media