பஞ்சாபி மக்னி பேசிக் கிரேவி- பிருந்தா ஆனந்த்

#தேவையான பொருட்கள்::

வெங்காயம் – 3
தக்காளி – 4
வெண்ணெய் – தே . அளவு
கிரீம் – தே . அளவு
பட்டை – 3
கிராம்பு – 5
ஏலக்காய் – 3
பிரியாணி இலை – 1
பச்சை மிளகாய் – 3
முந்திரி – 5
இஞ்சி – 2 இன்ச்
பூண்டு – 5 பல்
மிளகாய் தூள் – தே. அளவு
கரம் மசாலா – 1ஸ்பூன்
மல்லித்தூள் – தே. அளவு
கஸ்தூரி மேத்தி
பொடி – 1 கைப்பிடி
கொத்த மல்லி இலை -தே . அளவு

#செய்முறை::

*வெண்ணெயில் பட்டை ,கிராம்பு ,ஏலக்காய்
பிரியாணி இலை தாளித்து வெங்காயம், தக்காளி ,பச்சை மிளகாய் ,இஞ்சி பூண்டு, முந்திரி சேர்த்து மூழ்கும் அளவு நீர் சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்.
*கலவை ஆறியதும் மிக்சியில் நைசாக அரைத்து வடிகட்டியில் வடிகட்டவும்.
*வாணலில் வெண்ணெய் சேர்த்து வடிகட்டிய கிரேவியை ஊற்றி மிளகாய் தூள், கரம் மசாலா,உப்பு,மல்லி தூள் சேர்த்து
கொதிக்க விடவும்.
*கடைசியாக கஸ்தூரி மேத்தி பொடி ,கிரீம் சேர்த்து 1 நிமிடம் கழித்து கொத்த மல்லி இலை தூவி இறக்கினால்
*சுவையான பஞ்சாபி மக்னி பேசிக் கிரேவி
தயார்.

{குறிப்பு:: *இந்த கிரேவியில் பன்னீர்,காளான்,சிக்கன்,காலிபிளவர்,பன்னீர் டிக்கா ,பன்னீர் பட்டர் மசாலா போன்றவற்றவை செய்ய பேசிக் கிரேவி.
*இந்த கிரேவி செய்து 3 நாட்கள் பிரிட்ஜில் வைத்து கொள்ளலாம்.
*தேவையான போது பேஸிக் கிரேவி சேர்த்து உங்களுக்கு தேவையான காய்,கறிகள் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம்}

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100006513832331

Follow us on Social Media