பட்டர் காடை மசாலா – காளிதாசன் சுவாமிநாதன்

காடை ஒன்று சராசரியாக 100 கிராம் இருக்கும். விலை ரூ.40 அளவில் இருக்கும்.
5 காடை நிறைவாக இருக்கும்.
5 காடை கறி நான்கு நான்கு துண்டுகளாக நறுக்கி வாங்கி வந்து மஞ்சள் தூள் போட்டு பிசறி ஒரு மணி நேரம் வைக்கவும்(கவுச்சி வாசனை போவதற்காக). பிறகு கோழி கறி கழுவுவது போன்றே கழுவி குக்கரில் போடவும்.
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் (தனியா சேர்த்து அரைத்தது)2 ஸ்பூன், மிளகு தூள் 1 1/2 ஸ்பூன், சீரக தூள் 1 1/2 ஸ்பூன், ஏலக்காய்தூள் 1/2 ஸ்பூன், பெ.வெங்காயம் 2 தக்காளி 1 நறுக்கியது, உப்பு தேவையான அளவு போட்டு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 15 நிமி வேக வைக்கவும்!
கடாயில் 1 ஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியவுடன் சோம்பு கறி மசாலா பட்டை பிரிஞ்சி இலை கருவேப்பிலை போட்டு தாளித்து குக்கரில் வெந்த காடையை கடாய்க்கு மாற்றி நீர் வற்றும் வரை மிதமான தீயில் பிரட்டவும்.
இறக்குமுன் கொஞ்சம் தேங்காய் பால் பிழிந்ததை ஊற்றி கிளறி இறக்கவும்!
சுவையான சூப்பரான காடை பிரட்டல் தயார்!

சமையல் குறிப்பு :

Follow us on Social Media