பட்டர் மஸ்ரும் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

மஸ்ரூம் : 200 கிராம்
பட்டர் : 100 கிராம்
வெங்காயம் : 1
பிரியாணி இலை : 1
மிளகு : 15 நுணுக்கியது
இஞ்சி : 1 இன்ச் (சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்)
உப்பு : தேவையான அளவு

வறுத்து பொடியாக்க (அல்லது கரம் மசாலா உபயோகிக்கலாம்) :

பட்டை : 1
கிராம்பு : 2
ஏலக்காய் : 2

செய்முறை :

முதலில், கடாயில் 50 கிராம் வெண்ணை விட்டு, சூடானதும் பிரியாணி இலை, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் மஸ்ரூம் சேர்த்து வதக்கவும், பின் உப்பு சேர்க்கவும், மஸ்ரூம் தண்ணீர் விடும், அதிலேயே வேக விடவும், தனியாக தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

நன்றாக கூடி வரும்போது, மசாலா பொடி சேர்த்து, மீதமுள்ள வெண்ணை சேர்த்து இறக்கவும்.

பட்டர் மஸ்ரும் தயார் :

சமையல் குறிப்பு :

Follow us on Social Media