பட்டர் முட்டை ஃப்ரை – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

முட்டை : 4
மிளகாய் தூள் : ஒரு மேசைக்கரண்டி
சோம்பு தூள் : ஒரு தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
தேங்காய் துருவல் : அரை மூடி
வெண்ணெய் : 3 தேக்கரண்டி
வெங்காயத்தாள் (ஸ்பிரிங் ஆனியன்) : சிறிதளவு.

செய்முறை :

முட்டையை வேக வைத்து எடுத்து மேல் ஓட்டை நீக்கி விட்டு நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் தேங்காய் துருவலை போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், சோம்பு தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அதில் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் முட்டையை போட்டு இரண்டு பக்கமும் மசாலா ஒட்டுவது போல் நன்கு பிரட்டி வைக்கவும்

தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு உருகி வரும் போது , பிரட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை போடவும். மீதம் இருக்கும் அந்த மசாலாவையும் அதன் மேல் போட்டு விடவும்.

முட்டைகளை 2 அல்லது 3 நிமிடம் கழித்து பிரட்டி விடவும். அதன் பிறகு 2 நிமிடம் கழித்து மசாலா வெண்ணெயுடன் சேர்ந்து கெட்டியானதும் எடுத்து விடவும். வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.

பட்டர் முட்டை ஃப்ரை தயார்

சமையல் குறிப்பு :

Follow us on Social Media