பனீர் குருமா- Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

பனீர் : 200 கிராம்
தேங்காய் : அரை மூடி ( துறுவியது 1 கப்)
வெங்காயம் : 1
தக்காளி : 2
பூண்டு : 10 பல்
பிரிஞ்சி இலை : 1
பச்சை மிளகாய் : 1
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
சோம்பு : 1 தேக்கரண்டி
கசகசா : 1 தேக்கரண்டி
மிளகு : 1 தேக்கரண்டி
பேலியோ கரம் மசாலா : 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை : சிறிது
இந்துப்பு : தேவைக்கு
தேங்காய் எண்ணெய் : 2 தேக்கரண்டி

செய்முறை :

தேங்காய், சோம்பு, மிளகு, பச்சை மிளகாய், பூண்டு , & கசகசா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்

ஒரு கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் சதுரமாக நறுக்கிய பனீரை பிரட்டி எடுத்து தனியாக வைக்கவும்.

அதே கடாயில் மேலும் மீதி எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் & தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள் , மிளகாய் தூள் & உப்பு சேர்த்து பிரட்டி வதக்கவும்.

வதங்கியவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும்.

பின் அரைத்த விழுதை அதில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும். பின் பனீரை சேர்த்து மேலும் 2 நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான பனீர் குருமா தயார் …

சைவர்கள் பனீர் இட்லி, அசைவர்கள் முட்டை ஆம்லெட்டுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

Macros :
Calorie : 1757
Fat : 152
Protein: 50
Carb: 49
Fibre: 32

சமையல் குறிப்பு :

Follow us on Social Media