பனீர் சீரக புர்ஜி – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையானவை :

பனீர் : 200 கிராம் (நன்றாக உதிர்த்து கொள்ளவும் )
வெங்காயம் : 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி : 1 (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
குடை மிளகாய் : 1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
காஷ்மீர் மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
சீரகம் : 1 தேக்கரண்டி
பேலியோ கரம் மசாலா தூள் : அரை தேக்கரண்டி
கொத்த மல்லி இலை : சிறிது
இந்துப்பு : தேவைக்கு & நெய் : 2 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு கடாயில் நெய் ஊற்றி, சூடானதும் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், குடை மிளகாய், தக்காளி காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

பின் உதிர்த்த பனீர் சேர்த்து பிரட்டி, அத்துடன் பேலியோ கரம் மசாலா தூள் & இந்துப்பு சேர்த்து பிரட்டி, மூடி , மிதமான தீயில் 2 நிமிடம் வைக்கவும் .

பின் திறந்து கொத்த மல்லி இலை தூவி இறக்கவும்.

சுவையான பனீர் சீரக புர்ஜி தயார் !

Macros (Approx.):

Calorie: 789
Carb : 19.7 g
Protein : 39.5 g
Fat : 61.8 g
Fibre : 3.5 g

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/1305556053

Follow us on Social Media