பனீர் சுக்கா – Rtn கண்ணன் அழகிரிசாமி

பனீர் : 300 கிராம்
இஞ்சி பூண்டு விழுது : 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
மல்லி தூள் : அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் : அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 1
கறிவேப்பிலை : 1 ஈர்க்கு
கொத்தமல்லி இலை : சிறிது
நெய் : 2 தேக்கரண்டி
வெண்ணெய் : 1 தேக்கரண்டி
இந்துப்பு : தேவைக்கு
எலுமிச்சை சாறு : அரை தேக்கரண்டி

செய்முறை :

ஒரு கடாயில் 1 தேக்கரண்டி நெய் விட்டு சதுரமாக நறுக்கிய பனீரை சேர்த்து பொண்னிறமாக வருத்து எடுத்து தனியாக வைக்கவும்.

கடாயில் மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பச்சை மிளகாய் & கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து பிரட்டி அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் , கரம் மசாலா தூள் & இந்துப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் பனீர் துண்டுகளை சேர்த்து பிரட்டி கொதிக்க விடவும். சுண்டி வரும் போது வெண்ணெய் சேர்த்து பிரட்டி சுக்காவாக இறக்கவும். இறக்கும்போது எலுமிச்சை சாறு & கொத்தமல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.

சுவையான பனீர் சுக்கா தயார் !

சமையல் குறிப்பு :

Leave your vote

12 points
Upvote Downvote

Total votes: 30

Upvotes: 21

Upvotes percentage: 70.000000%

Downvotes: 9

Downvotes percentage: 30.000000%

Follow us on Social Media