பனீர் டிரை மசாலா – நசிமா இக்பால்

1.பனீர். 300கிராம்
தயிர் 1 1\2டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள்
சீரக தூள் 1\2டீஸ்பூன்
உப்பு
கஸ்தூரி மேத்தி 1டீஸ்பூன்

பெரிய வெங்காயம் 1 சதுரமாக கட் செய்யவும்
குடை மிளகாய்1 சதுரமாக கட் செய்யவும்

2.
வெங்காயம் 1 சிறியதாக நறுக்கவும்
தக்காளி. 1 ் அரைக்கவும்
இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிது
மிளகாய் தூள் காரத்திற்கு
கரம் மசாலா தூள் சிறிது
சீரகம் தூள் 1\4டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி சிறிது
உப்பு
மல்லி இலை
பட்டர்

1ல் உள்ள மசாலாவை தயிரில் கலந்து பனீர்,வெங்காயம்,குடை மிளகாயில் பிரட்டி அரை மணி நேரம் வைக்கவும்(கஸ்தூரி மேதியை கையில் நன்றாக தேய்த்து போடவும்)
தோசை கல் (அ)பிரை பானில் பட்டர் போட்டு பனீர் குடை மிளகாய் மற்றும் வெங்காயத்தை டோஸ்ட் செய்யவும்

கடாயில் பட்டர் போட்டு வெங்காயதை நன்றாக வதக்கவும் ,அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் பின் அரைத்த தக்காளி, மிளகாய் தூள்,சீரக தூள்,கரம் மசாலா,உப்பு,கஸ்தூரி மேத்தி சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து மசாளா கொதித்ததும் டோஸ்ட் செய்த பனீர்,வெங்காயம், குடை மிளகாய் போட்டு நன்றாக பிரட்டி மல்லி இலை தூவிஇறக்கவும்.

Follow us on Social Media