பனீர் பட்டர் மசாலா – சுபா துரைநாயகம்

உணவு வகை : பனீர் (சைவ உணவு)
உணவு முறை : பேலியோ
உணவின் பெயர் : பனீர் பட்டர் மசாலா (My version of Paneer Butter Masala )
நேரம் : இருபது + பத்து நிமிடங்கள் (Approximately 30 – 35 mins.)

தேவையான பொருள்கள் :

1. பனீர் – 200 gms
2. வெங்காயம் – 3
3. தக்காளி – 3
4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 tsp
5. மல்லி பொடி -2 tsp
6. மிளகாய் பொடி – 1½ tsp
7. மஞ்சள் பொடி – ½ tsp
8. கரம் மசாலா – 1 tsp ஸ்பூன்
9. வெண்ணை – 30 to 40 gms
10. கஸுர் மேத்தி – சிறிதளவு
11. பட்டை – 2
12. கிராம்பு – 3
13. ஏலக்காய் – 2
14. பிரிஞ்சு இலை – 2
15. சோம்பு – ¼ tsp

14595614_568609276659901_2665305917186938034_n14718725_568609203326575_394197885337337553_n

 

 

செய்முறை:

1. முதலில் பனீர் தயாரித்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
2. இரும்பு சட்டியில் 20 கிராம் வெண்ணை உருகி வந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
3. இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கவும்.
4. இதனுடன் தக்காளியும் உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. தக்காளி நன்கு மசிந்ததும் அதனுடன் மல்லி பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா, மஞ்சள் பொடி மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
6. நன்கு ஆற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
7. மீதியுள்ள வெண்ணெயை உருக்கி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சு இலை, சோம்பு சேர்த்து பொரிந்ததும் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.
8. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வெட்டி வைத்துள்ள பனீர் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
9. இறுதியாக கஸுர் மேத்தியை நன்கு கசக்கி போட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
10. விரும்பினால் 1 ஸ்பூன் வெண்ணெயை மேலே சேர்த்துக்கொள்ளலாம்.

 

 

Follow us on Social Media