பனீர் புதினா சாதம் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
பனீர் 200கிராம்
புதினா 2கைப்பிடி அளவு
கொடம்புளி அல்லது எலுமிச்சைசாறு சிறிதளவு
இந்துப்பு
பச்சமிளகாய் 1
தாளிக்க நெய் கடுகு பாதாம் 3,கறிவேப்பிலை வரமிளகாய் 2
செய்முறை#
முதலில் புதினா இலை புளி அல்லது எலுமிச்சைசாறு பச்சமிளகாய் உப்பு போட்டு மிக்சியில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின் வடச்சட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் (பாதாம் நெய்யில் வறுத்து கொள்ளவும்)போட்டு பின் அரைத்தவிழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் துருவிய பனீர் உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.சுவையான பனீர் புதினா சாதம் ரெடி.

2.வெண்டைக்காய் பொரியல்#
வெண்டைக்காய்+மஞ்சள்தூள்+மிளகாய்தூள்+கரம்மசாலா+இந்துப்பு…தாளிக்க நெய் கடுகு வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை..

3முள்ளங்கி மசாலா#
முள்ளங்கி+கறிமசாலா+மஞ்சள்தூள்+உப்பு+இஞ்சிபூண்டு விழுது…தாளிக்க நெய் கடுகு வெங்காயம் 1தக்காளி 1…

4.கெவீர் 50 மிகி#
தாளிக்க நெய் கடுகு கறிவேப்பிலை இந்துப்பு..தாளிப்பை ஆறவைத்து கெவீரில் போடவும்…கெவீரை சூடு படுத்துதல் கூடாது..

நன்றி கெவீர் தங்கைDr. Aarthi Pravin
நன்றி இந்துப்பு தம்பி Sriram Subramanian

சமையல் குறிப்பு :

Follow us on Social Media