பனீர் மஸ்ரூம் ஃப்யூசன் – Rtn கண்ணன் அழகிரிசாமி

தேவையான பொருட்கள் :

பனீர் : 200 கிராம்
மஸ்ரூம் : 200 கிராம்
வெங்காயம் : 3
தக்காளி : 2 ( இரண்டில் ஒன்றை சுடுநீரில் போட்டு தோல் உரித்து, அரைத்து வைத்துக் கொள்ளவும்)
குடைமிளகாய் : 1
நெய் : 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
மிளகாய் தூள் : 2 தேக்கரண்டி
மல்லி தூள் : 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
கரம் மசாலா : அரை தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு

செய்முறை :

ஒரு இரும்பு கடாயில் நெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், மஸ்ரும், உப்பு போட்டு ஒன்றன் பின் ஒன்றாக வரிசைப்படி வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள், மிளகாய், மல்லி, அரைத்த தக்காளி ஆகியவற்றை சேர்க்கவும். மஸ்ரூம் தண்ணீர் விடும், அதிலேயே இரண்டு நிமிடம் மிதமான தீயில் வேக விடவும் (தனியாக தண்ணீர் ஊற்ற வேண்டாம் ).

பிறகு நறுக்கிய பனீர், குடை மிளகாய் நறுக்கிய தக்காளி சேர்த்து மேலும் 1 நிமிடம் வேக விடவும். பனீர் உடையாமல் மிதமாக கிளறவும்.

சரியான பதம் வந்தவுடன் கரம் மசாலா தூவி, கிளறி இறக்கவும்.

பனீர் மஸ்ரூம் ஃப்யூசன் தயார்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media