பனீர் வெஜ் உப்புமா – – காயத்திரி அரசு

தேவையான பொருட்கள்:

பனீர் – 200 கிராம்,

சீஸ் – 20 கிராம்,

வெண்ணெய் – 20 கிராம்,

வெங்காயம்- 1,

கேரட் – 1 ,

ப.மிளகாய் -2,

நெய் – 1 டீ.க

தாளிக்க : கடுகு, சீரகம் , கறிவேப்பிலை .

செய்முறை:

வாணலியில் வெண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு. தாளிக்கவும். பின் வெங்காயம், ப.மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும். கேரட் துருவி உப்பு , மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். காய்கள் வதங்கிய பின் பனீர் உதிர்த்து போட்டு கிளற வேண்டும். சிறிது நெய் விட்டு மூடி போட்டு வேக விட வேண்டும். கடைசியாக சீஸ் துருவலுடன் மல்லி தழை போட்டு பரிமாறவும். தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும் சுவையான பனீர் உப்புமா. Preparation time – 10 mins.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media