பன்னீர்65, பிரோக்கோலி பூண்டு வறுவல் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்#
பனீர் 200 கிராம்
மிளகாய்தூள் 1 டீக
இஞ்சி பூண்டு விழுது 1 டீக
உப்பு தேவையான அளவு
ACV ல பனீர் பண்ணினேன் ..,அதனால் பனீர் புளிப்பு சுவையுடன் இருந்தது…தேவையென்றால் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்..
செய்முறை#
மேலே உள்ள பனீரை இஞ்சி பூண்டு விழுது,மிளகாய்தூள்,உப்புடன் கலந்து வைக்கவும்.தோசைக்கல்லில் எண்ணெய் தடவி காய்ந்ததும் ஊற வைத்த பனீரை ப்ரை பண்ணவும்(shallow fry) . சுவையான பனீர் 65 ரெடி.பனீர் இங்க இருக்கு 65 எங்கனு கேட்காதீங்க..?
பிரோக்கோலி பூண்டு வறுவல்#
தேவையான பொருட்கள்:
பிரோக்கோலி 1
வெங்காயம் 1
மிளகாய் வத்தல் 2
பூண்டு 10 பல் சிறியது
உப்பு தேவையான அளவு
தாளிக்க கடுகு சோம்பு கருவேப்பிலை,தேங்காய் எண்ணெய்
செய்முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பிரோக்கோலி,உப்பு போட்டு கொஞ்சமா தண்ணீர் சேர்த்து வதக்கவும்.சிறிது நேரத்திலேயே வதங்கிவிடும்.வேற ஒரு வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை,மிளகாய் வத்தல் , பூண்டு(சின்னதா அரிந்தது) போட்டு தாளித்து ஊற்றவும்.சுவையான பிரோக்கோலி பூண்டு வறுவல் ரெடி..

சமையல் குறிப்பு :

https://www.facebook.com/100003711296557

Follow us on Social Media