பன்னீர் எலுமிச்சை சாதம் – தேன்மொழி அழகேசன்

தேவையான பொருட்கள்
பன்னீர் 250 கிராம்
(துருவிக் கொள்ளவும்)முக்கால் பகுதியை எலுமிச்சை சாதத்திற்கும்,1/4 பகுதியை தயிர் சாதத்திற்கும் எடுத்துக் கொண்டேன்
எலுமிச்சை பழம் 1/2 மூடி
மஞ்சள் தூள் 1/2 தேக
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
பச்சமிளகாய் 1
வரமிளகாய்1
கருவேப்பிலை
செய் முறை#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை பச்சமிளகாய் வர மிளகாய் 1/2 மூடி எலுமிச்சை சாறு,பன்னீர் , துருவிய இஞ்சி,ம ஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கினால் சுவையான எலுமிச்சை சாதம் ரெடி
தயிர் சாதம்#
வடச்சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை பச்சமிளகாய்,பெருங்காயத்தூள் , பன்னீர்,தேவையான உப்பு சேர்த்து மிதமான சூட்டில் லேசா வதக்கவும்.வதக்கியதை தயிரில் கலக்கவும்.சுவையான தயிர் சாதம் ரெடி.
பிகு.
இதே முறையில் தக்காளி,காய்,தேங்காய் சாதம் ,பிரியாணி செய்து பதிவு பண்ணுங்க தோழிகளே.நன்றி.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media