பன்னீர் கட்லட் வித் சீஸி கோக்கணட் டிப் – ஸ்ரீராம் சுப்பிரமணியன்

பன்னீர் கட்லட் வித் சீஸி கோக்கணட் டிப்

பன்னீர் -200gm
வெங்காயம் -2(பொடி பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது 1 spoon
கொத்தமல்லி சிறிது
காரப்பொடி 1 spoon
உப்பு தேவைக்கு ஏற்ப

பன்னீர் ஐ உதிர்த்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும், அதனுடன் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,கொத்தமல்லி,காரப்பொடி,உப்பு இது அணைத்தும் ஓன்றாக கலந்து சப்பாத்தி மாவு போல சிறு சிறு உருண்டைகளாக வைத்து கொள்ளவும். இதை தட்டி, கோக்கணட் பௌடரில் பிரட்டி தோசை கல்லில் ரோஸ்ட் செய்தால் உங்களது பன்னீர் கட்லட் ரெடி.

குறிப்பு: தோசை கல்லில் ரோஸ்ட் பன்னும் போது அவ்வபோது பிரட்டவும், பன்னீரை குறைந்தது 5 நிமிடங்களாவது ரோஸ்ட் பன்னவும்(low flame). அப்போது தான் பன்னீர் நன்றாக உள்ளே வேகும்.

——————-/////—————-
சீஸி கோக்கணட் டிப்

50ml பால்
20gm கோக்கணட் பௌடர்
75gm சீஸ் துருவியது
ரெட் சில்லி பேஸ்ட் 1 teaspoon
உப்பு தேவைக்கு ஏற்ப
ஓயிட் வினிகர் 1 tbspn

மிதமான சூட்டில் கடாயில் பாலை ஊற்றி சூடு பண்ணவும், அதில் கோக்கணட் பௌடர் போட்டு நன்றாக கலக்கவும்(low flame), இப்போது துருவிய சீஸ்,ரெட் சில்லி பேஸ்ட் மற்றும் உப்பை சேர்த்து நன்று கலக்கவும். இறக்கிய பின்பு வினிகர் சேர்க்கவும், இப்போது உங்கள் சீஸி கோக்கணட் டிப் ரெடி.

குறிப்பு: சீஸ்ஸில் உப்பு இருக்கும்,அதனால் உப்பின் அளவை பார்த்து போடவும்.

சமையல் குறிப்பு :

Follow us on Social Media